Rasamani | இரசமணி

இரசமணி

உலகில் உள்ள 108 தனிமங்களில்  திரவ வடிவில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியல் கூற்றுப்படி பாதரசத்தில் அணு எண் 80; அணு எடை 200. 59; அடர்த்தி 13, 546. அதன் உருகு வெப்பநிலை 38. 87 சென்டி கிரேடு.

பாதரசத்தில் உருகுநிலை நமது உடலில் வெப்பநிலையை விட சற்றே தான் அதிகம் எனவேதான் இதை தெர்மாமீட்டர்களில் பயன்படுத்துகிறார்கள். பாதரசத்தை ஒரு குடுவையில் வைத்து சூடாக்கினால் கிட்டத் தட்ட இரண்டு நிமிடங்களிலேயே குடுவை காலியாக இருப்பதை பார்க்கலாம். இதுவே பாதரசத்தின் தன்மையாகும்.

பாதரசத்தின் இந்த தன்மையை மாற்றி அதை திரவ உலோகம் என்ற அடிப்படை உண்மையில் இருந்து மாற்றி திட உலோகம் என்ற அமைப்பிற்கு நிரந்தரமாக மாற்றுவது தான் இரசக்கட்டு என்று ஆதி சித்தர்கள் சொல்லி வைத்தார்கள்.

அறிவியல் கூற்று திரவ வடிவில் உள்ள பாதரசத்தை திடவழிவிற்கு மாற்றுவது சாத்தியமே இல்லை என்கிறது. மேலும் ஒரு உலோகத்தை வேறு உலோகமாக மாற்றுவது சாத்தியமே இல்லை என்கிறது நமது நவீன விஞ்ஞானம். அப்படியானால் பாதரசத்தை மற்ற உலோகத்தை போல் நம்மால் இறுக்கி திடப்படுத்த முடிந்தால் நவீன அறிவியல் சித்தாந்தத்தை முறியடித்ததாக ஆகுமா இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அப்படி இறுக்கி மற்ற உலோகங்களைப் போல் மாற்றுவது வெறும் வித்தை காட்டுவதற்காக அல்ல அப்படி என்றால் எவ்வாறு இறுகிய பாதரசத்தினால் நமக்கு என்ன பயன்?

ஒரு பொருளின் மூலதன்மையை மாற்றும்போது அது தன் பிறவி குணத்தை இழந்து வேறு சில அபூர்வ குணங்களை சம்பாதிக்கிறது.

அந்த குணங்களை நாம் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் நாம் அதன் அடிப்படையை மாற்றுகிறோம். கடைகளில் கிடைக்கும் பாதரசத்திற்குஎட்டு விதமான குற்றங்களும் 7 விதமான சட்டைகளும் உண்டு என சித்தர்கள் வகுத்து வைத்துள்ளனர். அவைகளை முறைப்படி சுத்தி செய்து அதற்கு உரிய முறையில் வாலை இரசமாக இறக்கி அதன் பிறகு மணி ஆக கட்ட வேண்டும்.

சாதாரண இரசமணிகள் அதாவது நெருப்பிற்கு ஓடும்படியான மணிகள் உயர்நிலை ரசமணிகள் அதாவது நெருப்பிற்கு ஓடாமல் உயர் கொதிநிலையில் கூட தாக்குபிடித்து நிற்கும் மணிகள் என இரண்டு பிரிவாக இரசத்தை கட்டலாம்.

இரசமணி செய்ய தெரியும் என்ன சொல்லிக் கொள்பவர்களில் இன்று எத்தனை பேருக்கு நெருப்பிற்கு ஓடாத ரசமணி கட்டத் தெரியும் என்றால் விடை அனேகமாக ஒற்றை இலக்கத்தில் தான் கிடைக்கிறது. ஏனென்றால் பாதரசத்தை நெருப்புக்கு ஓடாமல் கட்டுவது மிகவும் அபூர்வமானது; ரகசியமானது.

இவ்வாறு அடிப்படை மாறாமல் கட்டப்பட்ட இரசத்தை அதன் வேகத்தையும் வீரியத்தையும் சக்தி ஏற்றும் சாரணை முறைகள் மூலமாக படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும். அதில் பல படிகள் உண்டு.  ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பயன்படும்.

இவ்வாறு முறையாக கட்டப்பட்ட ரசம்- ரசமணிகள் செய்ய மட்டுமில்லாமல் ரசவாதத்திற்கும் பயன்படும்.

ரசவாதம் என்பது தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றம் சித்தர்களின் அற்புதமான ரகசிய முறையாகும்

பயன்கள்

இரசமணி- இதன் பயன்கள் சொல்லில் அடங்காது. உடல் இன்பத்தை அற்புதமாக அதிகரித்து நீடிக்கச் செய்வதில் இருந்து உடல் நோய்களுக்கு தீர்வாகவும் தீய சக்திகளை வலுவுடன் தடுப்பது வரை பல்வேறு அற்புதமான பலன்களை உண்டாக்க வல்லது ரசமணி ஆகும். முறைப்படி ரசமணிகள் தயாரித்து முறையாக சக்தி ஏற்றி இடுப்பிலோ கழுத்திலோ அணிந்து உரிய பலன்களை அடையலாம். தெய்வச் சிலைகளாக கூட வடித்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

உடலில் ரசமணியை அணியும் போது அணிபவர்களின் உடல் வெப்பத்தை பொறுத்து விசித்திரமாக நிறம் மாறும் அப்படி மாறிய நிறத்தை அதன் அசல் நிலத்திற்கு கொண்டு வரலாம் -கொண்டு வர வேண்டும். அந்த சூட்சம ரகசியம் நமது பாடத்திட்டத்தில் மிகவும் எளிதாக சொல்லி வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஏதேனும் ரசத்தை கட்டுவதில் தவறுகள் ஏதேனும் செய்தால் நேர்முக மற்றும் நேர்முகத் தொடர்பு அல்லது இணைய வழி 1 நாள்  பயிற்சியில் ஆசான் அவர்கள் அதை எவ்வாறு சரி செய்து என விவரமாக செய்து காட்டுவார்கள்.

தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது அல்லவா?