Karuvurar Spiritual Training Centre |கருவூரார் தெய்வீக பயிற்சி நிலையம்

ஏற்றமிகு வாழ்வுதனை மனிதர்கள் பெறுவதற்கு ஆதி சித்தர்கள் பல ஆண்டுகள் தங்கள் தவ வலிமையால் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு மார்க்கங்களை உலகிற்கு அளித்துள்ளனர். மனிதன் உடற்கூறு, மூலிகைகள், ரசவாதம், மனித மனம் முதல் பிரபஞ்சம் தொடங்கி இன்றைய விஞ்ஞானம் தொட்டுப் பார்க்க இயலாத பாகங்களுக்குள் எல்லாம் தங்கள் தவ வலிமையால் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர்.

அவர்களை பொறுத்தவரை இனி ஆய்வுகள் மேற்கொள்ள தலைப்புகள் இல்லை. இன்றைய விஞ்ஞானமும் பகுத்தறிவு வாதிகளும் இன்றைக்கு கண்டுபிடித்ததாக மார் தட்டிக் கொள்ளும் விஷயங்கள் அனைத்தும் ஆதி சித்தர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்ததாயிற்று என்றால் அதில் மிகை இல்லை.

இன்றைக்கு விஞ்ஞானத்தின் உயரிய கண்டுபிடிப்பாக கருதப்படும் செல்போன், சேட்டிலைட், தொலைக்காட்சி, ஒளிபரப்பு ஆகியவற்றை அன்றைக்கே அவர்கள் டெலிபதி – தொலைவில் உணர்தல் என்ற ஒரே சொல்லில் மாட்டிக் கொள்ளாமல் முடித்துக் கொண்டார்கள்.

நாளைய வாழ்வுரிந்து வழி நடக்க ஜோதிடம் மழையளவும் இன்னல் வந்தாலும் மலைப்பின்றி துன்பத்தை துரத்தி அடித்து வெற்றிக்கான மாந்திரீகம் உடலில் தோன்றும் மின்னல்களுக்கு வைத்தியம் உள்ளத்தில் தோன்றும் இன்னல்களுக்கு தியானம் இறைவனின் முன் அறிவிப்பாக இதயத்தில் தோன்றும் குழப்பமான வினாக்களுக்கு விளக்கம் தருவதாக பிரசன்னம் – ஆருடம் மனதின் துணைகொண்டு மகத்தான சாதனைகள் செய்ய மனோவசியம் நிம்மதியான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் போன்ற கலைகளை மிக முக்கியமாகவும் மனிதனின் நிம்மதியான வாழ்விற்கு அத்தியாவசியமாகவும் வகுத்து வைத்துச் சென்றார்கள்.

இதில் காலம் பல கடந்தும் இக்கலைகள் மனித வாழ்வில் எக்காலத்திற்கும் பொருந்தி வருவது மட்டுமல்லாது மிக முக்கிய பங்கு வைக்கின்றன என்றால் மிக எதுவுமில்லை என்றே சொல்லலாம். இவ்வறிய பொக்கிஷங்கள் கயவர்கள் கையில் சிக்கி தீய செயல்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அர்ப்பர்கள் தங்கள் சுய லாபத்திற்காக பணத்திற்காக இக்கலையின் துணைகொண்டு அப்பாவிகளுக்கு இன்னல்களை இழைத்து விடக்கூடாது என்பதற்காகவும் பரிபாஷையாக இலை மறை காயாக சொல்லுக்குள் சூட்சமங்களை சூடி பாடல் வடிவில் வடித்து வைத்தனர்.

பூர்வ ஜென்ம புண்ணியமும் உண்மையான ஆர்வமும் நல்ல சிந்தனையும் உடையவர்களுக்கு இக்கலைகள் ஒரு சரியான வழிகாட்டி நிச்சயம் கிடைக்கும் படி வழிவகை செய்ய பிரபஞ்சத்திற்கு கட்டளையும் கொடுத்தும் வைத்துள்ளனர்.

நாகரீகம் என்ற போர்வை மனிதனின் அறிவை கொஞ்சம் கொஞ்சமாக மூடத் தொடங்க கொலை, கொள்ளை, சூது மது, மாது போன்ற பஞ்சமா பாதகங்கள் மனிதனின் புத்தியை ஆக்கிரமிக்க துவங்கி விட்டன. யோகம் ஒதுங்கி போகம் என்னும் பொல்லாங்கு அவனை வேதனை குழியில் தள்ளி வேடிக்கை பார்க்க துவங்கியது.

தன் மனைவியின் அழகை ஆராதிக்க முடியாமலும் அமுதத்தை மழலையை கொஞ்சம் கொஞ்ச நேரமும் இல்லாமலும் வயதான பெற்றோரை பரிவோடு கவனிக்க இயலாமலும் வாழ்க்கைச் சக்கரத்தை அவசர அவசரமாய் சுற்றி சுற்றி உழைத்தாலும் கடன், வறுமை எதிலும் தோல்வி எதிர்காலத்தை பற்றிய பயம், விரக்தி, வேதனை, வம்பு, வழக்கு என்று தான் வாழ்க்கை உள்ளதே தவிர நிம்மதி என்பது கண்களுக்கே புலப்பட்டதாக தெரியவில்லை.

அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே சாஸ்திரங்களின் துணை கொண்டு வாழ்வை நல்ல வழிப்படுத்திக் கொண்டு நலமாக வாழ்கின்றனர். துரதிஷ்டம் என்னவென்றால் அவர்கள் ஏற்றம் பெற்ற வழி முறைகளை மற்றவர்களுக்கு பயன்படும்படி தெரிவிக்காமல் தங்கள் பரம்பரைக்கு மட்டும் போதித்து விட்டு மறந்து விடுகின்றனர் என்பதுதான்.

இன்னும் சிலர் தமது வீட்டில் கண்ணுக்கு தெரியும் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் கூட அது சம்பந்தமாக பிளம்பருக்கு தான் தெரியும் என பிளம்பரின் ஆலோசனையை கேட்பதோடு இல்லாமல் யாரேனும் முயற்சி செய்தால் கூட இதைப்பற்றி உனக்கு என்ன தெரியும் சும்மா இரு என அமர்த்தி விடுவார்கள்.

ஆனால் துன்பத்தில் துவளும் மனிதனின் வாழ்க்கை பாதையை மாற்றும் மகத்தான ஜோதிடம், மாந்திரீகம் மற்றும் மனோவசியம் போன்ற கலைகளை அதன் அரிச்சுவடியை தெரியாவிட்டாலும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலுமா ஜோதிடம்-மாந்திரீகம் என நம்புகிறீர்கள்? உங்களைப் போன்றவர்களால் தான் நம் நாடு இப்படி உள்ளது என கேள்விகளை உதிர்ப்பதோடு தானும் அக்கலையை பயன்படுத்தாமல் அடுத்தவரையும் பயன்படுத்த விடாமல் தடுப்பதால் வீணாய் போகின்றன. இந்த அறிவிலிகளை நினைக்கும்போது நமக்கு சிரிக்க தோன்றவில்லை பரிதாபம் தான் வருகிறது.

முழுவதுமாக அவர்களை குறை சொல்லவும் வாய்ப்பில்லை தான். சமீபகாலமாக இத்துறைகளில் நுழைந்துள்ள போலிகளும் அரைவேக்காடுகளாலும் இக்கலைகளுக்கு சற்று களங்கம் வந்துள்ளதால் அவர்களின் கருத்துக்கள் சற்று எடுப்பாக தெரிகிறது. அவ்வளவே. ஆனால் உண்மை மட்டும் என்றைக்கும் நிலைக்கும்.

இக்கலைகளை நாங்கள் பல ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு இந்த அரிய கலைகளில் உள்ள தேவையில்லாத சம்பிரதாயங்களையும் மூட பழக்க வழக்கங்களையும் அகற்றி, நாங்கள் நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி அடைந்த ரகசிய முறைகளை இப்பொழுது எந்தவித ஒளிவு மறைவும் இன்றி முழுமையாக, அனுபவங்களின் அடிப்படையில் பாடத்திட்டமும் பாடங்களும் தயார் செய்து நாங்கள் கற்றுத் தர முன் வந்துள்ளோம்.

இப்பாடங்களை தயாரிப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது என்பது பாடங்களை படிக்கும் போதே உங்களுக்கு நன்கு புலப்படும். இந்த பாடங்கள் அனைத்தும் சித்தர் பெருமக்களின் பாடல்களில் பரிபாசையாக உள்ள சூத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும்.

இக்கலைகளை நாங்கள் போதிக்கும் உயர்தன்மையில் விஞ்ஞான அடிப்படையில் வேறு யாரும் தற்காலத்தில் போதிப்பது இல்லை. இந்த அரிய வாய்ப்பை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வதில் தான் உங்கள் முன்னேற்றம் உள்ளது.

குருகுல கல்வி
தெய்வீக கலைகள் அனைத்திவேயுமே குரு என்பவர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டியது மாணவரின் கடமைகளில் ஒன்று என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்..

இந்த பாரம்பரிய கலைகள் அனைத்தும் எம்மிடம் குருகுல பயிற்சியாகவே கற்றுத் தரப்படுகிறது. நேர்முகம், அஞ்சல் முறை மற்றும் இணைய வழி இதில் எந்த முறையில் பயின்றாலும் ஒழுங்கு-கட்டுப்பாடு மிக முக்கியம்.

நீங்கள் ஒரு உயர் அதிகாரி ஆகவோ ஆசான் அவர்களை விட அதிகம் படித்தவராகவோ வயது முதிர்ந்தவராகவோ சமூக அந்தஸ்து மிக்கவராகவோ இருக்கலாம் ஆனால் எங்களைப் பொருத்தவரை நீங்கள் ஒரு மாணவர் அவ்வளவுதான்.

பயிற்சி ஆரம்பிக்கும் முன்னரே பயிற்சியின் போது மாணவரின் குணநலன்கள் சரியில்லை என தலைமை ஆசான் அவர்கள் கருதினால் காரணம் ஏதும் கூறாமலே அட்மிஷன் தரவோ மறுக்கவோ கற்றுத்தர மறுக்கவோ ஆசான் அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

நேர்முக வகுப்பில் நியாயமான சந்தேகங்கள் தவிர ஏனைய குதர்க்கமான கேள்விகளுக்கு வகுப்பில் இடமில்லை கடுமையான ஒழுங்கு கடைபிடிக்கப்படும். செல்போன் பேசவும் இடையே வகுப்பில் அடிக்கடி எழுந்து நடக்கவும் அனுமதிக்க இயலாது. செலுத்தப்பட்ட கட்டணங்கள் எக்காரணத்தை கொண்டும் திருப்பி தர இயலாது.

இக் கட்டுப்பாடுகளை ஏற்பவர்கள் மட்டுமே எமது பயிற்சியில் சேர இயலும். பாடங்கள் தொடர்பாக எத்தனை சந்தேகங்கள் இருந்தாலும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும்.

பயிற்சி முறைகள்
நேர்முகம் மற்றும் அஞ்சல் வழி பயிற்சிகள் நமது நிலையத்தில் உள்ளது. அஞ்சலில் பயின்றவர்கள் தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள நேர்முக தொடர்பு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். நேர்முகத் தொடர்பு பயிற்சி என்பது அஞ்சல் வழியில் பயின்ற மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் ஒரு முகாமாகும்.

இதற்கு தனி கட்டணம் உண்டு. இதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தபால் மூலம் பயில்பவர்களுக்கு பாடங்கள் வரிசை கிராமமாக தகுந்த இடைவெளியில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.

வீடியோ தொகுப்பு

தபால் வழி / நேர்முகம் மற்றும் இணைய வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் பயிற்சிகளுக்கு மட்டும், ஆசான் அவர்கள் நேர்முக வகுப்பில் நடத்திய வீடியோ தொகுப்புகள் வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் தங்களை தவிர வேறு நபர்களுக்கு விநியோகிக்க கூடாது.

வெளிநாட்டினருக்கு

வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடங்கள் எல்லாமே விமான பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் இந்தியா வரும் நாளை முன்கூட்டியே தெரிவித்தால் நேர்முகத் தொடர்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் மாணவர்கள் எடுக்கும் பயிற்சியை பொறுத்து பயிற்சி கட்டணத்தில் தபால் செலவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி பதில்கள்
ஒவ்வொரு பாதகத்தின் கடைசிகளும் கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கும் அதற்கான பதில்களை எழுதி எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவை ஆசான் அவர்களால் நேரிடையாக திருத்தப்பட்டு அடுத்த பாகத்துடன் அனுப்பி வைக்கப்படும்.

முழு பயிற்சி கட்டணத்தையும் செலுத்தியவர்களுக்கு பதில்கள் வர வர உடனடியாக அடுத்தடுத்த பாகங்கள் அனுப்பி வைக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் அனைத்து பாகங்களும் மொத்தமாக அனுப்பி வைக்க மாட்டாது.

Share this article

Our bestsellers

Related articles

No posts to display

Recent blog posts