ஒருவரின் உள்ளங்கையில் உள்ள ரேகையை வைத்து அவரின் குண நலன், வாழ்க்கை நலன், எதிர்காலம், கடந்த காலம் எல்லாவற்றையும் அறியும் கலை. இந்தியாவில் தொடங்கி உலகம் முழுதும் பரவிய கலைகளில் கைரேகை சாஸ்திரமும் ஒன்று. பிரசன்ன ஜோதிட பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
இது ஒரு நபரின் உடல், மன மற்றும் விதியின் திறனை கணிக்க உதவுகிறது.
உள்ளங்கையில் உள்ள ஒவ்வொரு ரேகையும் ஒருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது. அதாவது கைரேகைகள், ஒருவரின் உடல்நலம், வாழ்க்கை,காதல், தொழில், ஆளுமை, இயல்பு, பலம் மற்றும் பலவீனங்கள் போன்ற ஒரு நபரைப் பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறது.
உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிய கைரேகை சாஸ்திரம் உறுதுணையாக இருக்கும். எனவே அனைவரும் கைரேகை சாஸ்திரத்தை வழிகாட்டியாக கற்று பயன்படுத்தலாம்.
கைரேகை சாஸ்திரம், மனதைக் கூர்மைப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகிறது. ஒரு மனிதனுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் படைப்பாற்றலை அறியவும் வெளியே கொண்டு வரவும் கைரேகை கலை உதவும்.
கைரேகை சாஸ்திரம் கற்றவர்கள் தங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தி எதிலும் வெற்றியை நிலை நாட்டிய வண்ணம் உள்ளனர்.
ஏனைய கலைகளை விட கைரேகை கலை மிகவும் நுட்பமானது. எப்பொழுதும், எந்த ஒரு செயலையும் ரேகைகள் உடன் தொடர்பு படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் முழுமையான ரேகை சாஸ்திர நிபுணர் ஆக முடியும்.
சாமுத்திரிகா லட்சணம் என்ற கலையின் துணை கலை தான் கைரேகை சாஸ்திரம். நம் எதிரே இருக்கும் நபர் நம்மிடம் கைரேகைகளை மறைத்த வண்ணம் பேசி கொண்டிருந்தால் கூட விரல்கள், நகங்கள், நிற்கும் அல்லது அமர்ந்திருக்கும் தோரணை இவற்றை வைத்தே அவரின் குண நலன்களை சொல்லி விட முடியும்.
இந்த பழக்கமாக மாறும் வகையில் கைரேகை சாஸ்திரத்தை மிகவும் ஆழமாக படிக்க வேண்டும்.
உள்ளங்கையை எவ்வாறு ஆய்வு செய்வது என்பது பற்றிய விளக்கம் முதல், செல்வம், ஆரோக்கியம் மற்றும் ஆயுள் போன்ற மனிதனின் அடிப்படை தேவையான விபரங்களை அறியும் முறை.
இந்த கைரேகை அடிப்படை பயிற்சியின் மூலம் உள்ளங்கையில் உள்ள ரேகைகளில் இருந்து வாழ்க்கை நிகழ்வுகளின் தாக்கங்களை பகுப்பாய்வு செய்ய கற்றுக் கொண்டு வாழ்வை வழப்படுத்த முடியும்.
Reviews
There are no reviews yet.