பாரம்பரிய ஜோதிடம்
தற்பொழுது உலகெங்கிலும் அனுபவ ஜோதிடர்களுக்கு மிகவும் வரவேற்பு உள்ளது என்பதை நீங்கள் அறிந்ததே. உலக நாடுகளில் விண்வெளி ஆய்வில் அமெரிக்காவை தான் நாம் முதன்மை பெற்ற நாடாக கருதுகிறோம். ஆனால் அவர்கள் நமது ஜோதிட கலையை பற்றி மிகவும் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமல்லாது மிகவும் மதிக்கின்றன.
அதற்குக் காரணம், இன்று எத்தனையோ ராக்கெட்டுகளை அவர்கள் அனுப்பி தெரிந்து கொண்டதையும் சேட்டிலைட்டுகள் மூலம் விண்வெளியை ஆய்வு கொண்டு எந்த கிரகம் எந்த இடத்தில் உள்ளது? அவற்றிற்கு இடையேயான தூரம் எவ்வளவு? எந்த வட்டப்பாதையில் சுற்றுகிறது? அவை ஒரு சுற்று சுற்ற எவ்வளவு காலம் ஆகிறது? என்பது போன்ற பெரிய பெரிய துல்லிய ஆய்வு கணக்குகள் எல்லாவற்றையும் பஞ்சாங்கம் என்ற ஒரு சொல்லுக்குள் சுருக்க வைத்துவிட்டனர் நம் முன்னோர்கள்.
மேலும் வெள்ளம், புயல், பஞ்சம், கிரகணங்கள் ஆகிய அனைத்தையும் மிகவும் துல்லியமாக முன்கூட்டியே கணித்து நமக்கு தந்துள்ளனர். கிரகணங்கள் எப்போது ஆரம்பிக்கும் எப்போது உச்சத்தை அடையும் எப்போது முடியும் என்பது மிகவும் துல்லியமாக நமது பஞ்சாங்கத்தில் உள்ளது.
இந்த ஒன்று போதும் ஜோதிடம் ஒரு முழுமை பெற்ற விஞ்ஞானம் என்று நிரூபிக்க இல்லையா? இன்னும் சொல்லப் போனால் வேறு என்ன சான்றுகள் வேண்டும்?
எம்மிடம் ஜாதகம் பார்க்க வரும் அன்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது ஒரு உண்மை புலப்பட்டது. அது என்ன வென்றால் பெரும்பான்மையான ஜோதிடர்கள் ஜாதகத்தை சாதகமாக சொல்வதையும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பிடுங்கும் பேய்களாகவும் இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்தது. இதனால் நல்ல ஜோதிடர்களை மக்கள் அடையாளம் காண முடியாமல் போனதை உணர்ந்து மனம் வேதனைப்பட்டது.
இத்தகைய குறைகளை களையவும் ஜோதிட துறையில் ஒவ்வொரு ஜோதிட புத்தக எழுத்தாளர்களும் (அனுபவ ஜோதிடர்கள் அல்ல) ஒவ்வொரு பாணியை கடைப்பிடிப்பதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் ஒரு முழுமையான ஜோதிடராக முடியாமல் இக் கலையை கை கழுவியவர்கள் ஏராளம்.
மேலும் பல்வேறு ஜோதிடம் கற்பிக்கும் நிறுவனங்கள் கடைகளில் கிடைக்கும் புத்தகத்தில் உள்ளதை அப்படியே தங்கள் பாடத்திட்டத்தில் வைத்துள்ளதால் மாணவர்களுக்கு அனுபவ ஜோதிட நுட்பங்கள் கிடைக்காமல் போயிற்று.
எனவே, நாங்கள் எங்கள் பரம்பரையில் கையாண்ட அதி ரகசியமான எளிய ஜோதிட சூட்சமங்களையும் சூத்திரங்களையும் எங்கள் பாடத்திட்டத்தில் மிகவும் திறந்த மனதுடன் வெளியிட்டுள்ளோம்.
ஜோதிடம் பற்றி துளியும் தெரியாதவர்கள் கூட எமது பயிற்சியில் இணைந்தால் முழுமையான ஜோதிடர் ஆக கூடிய அளவிற்கு எளிமையாக எங்கள் பயிற்சி திட்டத்தை வகுத்து வைத்துள்ளோம்.
இணைந்து பயன் பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.