"இந்த வீட்டிற்கு வந்த பிறகு தாங்க எனக்கு வளர்ச்சியே..... " என்று சிலர் சொல்லி மகிழ்வதும் , "தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கால் காசு தங்கவில்லை. கடன் அதிகரிக்கிறது, உடல் நல பிரச்னை வேற..." என பலர் புலம்புவதுண்டு.
இது வாடகை வீட்டில் குடியிருந்தாலும், சொந்த வீட்டில் குடியிருந்தாலும், மக்களின் நிலை இது தான்.
சிலரோ வீடு அதிர்ஷ்டமாக இருக்கிறது என முடிவு செய்து விட்டால் தண்ணீர் பிரச்னை, வாடகை அதிகம் என பிரச்னைகள் இருந்தாலும் அந்த வீட்டை மாற்றவே மாட்டார்கள்.
வாஸ்து என்பது வீடு கட்டும் போது மட்டுமல்ல. வாடகை வீட்டிற்கும் பொருந்தும்.
ஆதிகாலம் தொட்டு நம் முன்னோர்கள் சாதாரண குடிசையாக இருந்தாலும் சரி மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் ஆனாலும் சரி, முறையாக சாஸ்திரத்துக்கு உட்பட்டு கணிதம் செய்துதான் கட்டத் தொடங்கினர்.
பல தலைமுறைகள் கடந்து அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் நிலைத்து நிற்பதற்கு இன்றும் சான்றாக, பல அரண்மனைகள், கோவில்கள் நீடித்து நின்று வருகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்.
இன்றைய சூழ்நிலையில் ஒரு வீடு வேலை துவங்கும் முன் நல்ல நிலையில் இருந்த ஒருவர், கடன் பட்டோ, கைது நடவடிக்கைக்கு உட்பட்டோ, உறவுகளை இழந்தோ, இன்னும் சொல்லப் போனால் எதிர்பாராத வண்ணம் விபத்தினால் உயிரையே விடும் சூழல் ஏற்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
நவீன அளவு முறையான மெட்ரிக் முறை வந்ததும் நமது பாரம்பரியமான கணித முறைகள் கற்பவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கின.
இவர்களை வைத்து நாம் குடியிருக்க வீடு கட்டினால் நம் கதி?
எவ்வளவோ செலவு செய்கிறோம். நாம் நிம்மதியாக வாழ சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் தவறு கிடையாது.
வாஸ்து என்றால் என்ன என்பதில் தொடங்கி. வாழ்வில் வளர்ச்சி பெற வாஸ்துவை பயன்படுத்தும் சூட்சுமங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக் கொண்டு வாஸ்து நிபுணர் ஆக உடனே பயிற்சியில் இணைவீர்.
Reviews
There are no reviews yet.