மாந்திரீகம் உயர்நிலை
மாந்திரீகத்தின் அதிசக்தி வாய்ந்த இரகசிய பாகங்கள் குரு முறையாக போதிக்கப்படுகிறது. ஆசான் அவர்களின் பரம்பரையில் கையாண்ட உயர் சக்தி வாய்ந்த மாந்திரீக பிரயோக முறைகள்.
இப்பயிற்சி முடிந்ததும் அதிசக்தி வாய்ந்த மாந்தரிகராக இருப்பீர்கள். பல்வேறு தெய்வ சக்திகள் நிறைந்த நபராக மாறுவீர்கள். எந்த மந்திரவாதிகளும் உங்களை கட்ட இயலாது.
எண் சக்தி - எழுத்து சக்தி பிரயோகம்
மாந்திரீக கலையில் ஒரு குறிப்பிட்ட எண் மிகவும் அமானுஷ்யமான சக்திகளை உள்ளடக்கியது. இந்த எண் இயக்க சக்தி மற்றும் இயங்கும் சக்தி இரண்டையும் உள்ளடக்கியது. இந்த எண்ணிற்கும் சில எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது அவற்றை முறையாக வடிவமைக்க தெரிந்தால் உலகில் நம்மால் ஆகாத காரியம் என ஒன்றும் இல்லை என சொல்லலாம். இந்த எண்ணையும் இதனோடு தொடர்புடைய சில எழுத்துக்களையும் ஒரு சூட்சம விதிக்கு உட்படுத்தி இடமாற்றி போட்டு இந்த உலகின் ஆதி ஒலியை இணைத்தால் அதுவே அதிஉயர் நிலை மந்திரம் எனப்படுகிறது.
நவக்கிரஹ சூட்சம்
இது ஒரு சக்தி வாய்ந்த உபாசனை. சித்தர்கள் பரிபாஷையாக தங்களுக்குள் கையாண்ட முறை. கிரஹங்களை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
ஜோதிட ரீதியாக வலுவிழந்த கிரஹங்களை வலுவடையச் செய்வதும், வலுவுடைய கிரஹங்கள வலுவிழக்க செய்வதும் மனிதனின் அறிவிற்கு எட்டாத செயலாகும். அது துஷ்டர்களின் கையில் சிக்கினால் உலகில் தீமை தலைவிரித்து ஆடும் என்பதாலும் அதே நேரத்தில் நல்லவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிட்டாமல் போய்விடக் கூடாது என்பதாலும் பரிபாஷைகளாக பாடல் வடிவில் பாடி வைத்துள்ளனர் நம் சித்த பெருமக்கள்.
மாணவர்களுக்கு நவகிரஹ சூட்சும ரகசியங்கள் பட்டியலிட்டு விவரிக்கப்படுவதோடு அல்லாமல் அதை கையாளும் முறைகளையும் இயக்கும் முறைகளும் தெளிவாக விவரிக்கப்படுகிறது.
சக்கரங்கள்
அநேக சக்கரங்கள்- அதன் பயன்பாடுகள்-அதை எழுதும் முறை எந்திரங்களின் சுத்தி சாப நிவர்த்தி அதற்குரிய மூல மந்திரங்கள் உரு வேற்றும் முறை அவசர காலத்திற்கு பயன்படும் உரு இல்லா சக்தி வாய்ந்த எந்திரங்கள், போன்ற சக்தி வாய்ந்த அரிய விபரங்களை நீங்கள் அடிப்படையில் இருந்து கற்றுத் தேரலாம்.
கரு முறை -உரு முறை
மாந்திரீகர்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்களான உரு முறை, கரு முறை என்பது என்ன? இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது? அவற்றை எவ்வாறு இயக்குவது? போன்ற விபரங்களை முழுமையாக கற்றுக் கொள்ள முடியும். முக்கிய மை முறைகள் செய்யும் முறைகள் அனுபவ ரீதியாக கற்றுத் தரப்படுகிறது.
இன்னும் அனேக இரகசியங்கள் அடங்கியது. எம் மாணவர்களுக்கு மட்டும் .
Reviews
There are no reviews yet.