மஹா பாக்கிய சுதர்சன எந்திரம்
மகாவிஷ்ணுவின் ஆயுதமாக இருக்கும் சுதர்ஷன சக்கரம் ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்பட்டு, சக்கரத்தாழ்வார் என உயர்வாக பூஜிக்கப்படுகிறது. இதுவே சுதர்ஷண சக்கரத்தின் மகிமையை பறை சாற்றும்.
எம்பெருமான் பல துஷ்டர்களையும் அரக்கர்களையும் இந்த சுதர்சனத்தால் அழித்து அனைவரையும் காப்பாற்றி உள்ளார் என்று புராணத்தில் படித்து உள்ளோம்.
பெருமாள் கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறமுள்ள யோக நரசிம்மரையும் வணங்கி, வலம் வந்தால் நான்கு வேதங்கள், பஞ்ச பூதங்கள், அஷ்ட லட்சுமிகள், எட்டு திசைகள் இவற்றை எல்லாம் வணங்கிய பலன் கிடைக்கும். சக்கரத்தாழ்வாரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் துளசி மற்றும் தாமரை சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பு.
சுதர்சன எந்திரத்தை தரிசித்து வந்தால் துஷ்டர்களின் தொல்லை நீங்கும். ஏவல், பில்லி, சூனிய தோஷம் விலகவும், பேய் பிசாசு துஷ்டர் தோஷம் கிரக ஆயாதி தோஷம் விலகவும் நீண்ட ஆயுள் , 16 விதமான செல்வங்களும் கிடைக்கவும் இந்த எந்திரம் கவசத்தை உபயோகிக்கலாம்.
Reviews
There are no reviews yet.